×

அரசு வக்கீல்களுக்கான ஊதிய விகிதம் 3 மடங்கு அதிகரிப்பு முதல்வருக்கு நன்றி

சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கான தொழில் ஊதியத்தை மூன்று மடங்காக அதிகரித்து வழங்கிய முதல்வருக்கு திமுக சட்டத் துறை சார்பில் என்.ஆர்.இளங்கோ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி வெளியிட்ட அறிக்கை: எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படை கொள்கையுடன், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வரும் முதல்வரிடம் அரசு வழக்கறிஞர்களின் நலன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று திமுக சட்டத்துறைச் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, அதை தாயுள்ளத்துடன் பரிசீலித்தும் அவர்களின் உழைப்பை உரிய வகையில் அங்கீகரித்தும் அரசு வழக்கறிஞர்களின் நலனை எண்ணியும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் ஊதிய விகிதத்தை மூன்று மடங்காக அதிகரித்து வழங்கி, என்றும் மக்களின் நலன் நாடும் அரசு என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக சட்டத்துறை சார்பிலும், திமுக வழக்கறிஞர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு வக்கீல்களுக்கான ஊதிய விகிதம் 3 மடங்கு அதிகரிப்பு முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,Secretary of ,Legal Department ,of ,Dimuka ,Senior Advocate ,N. R. Llango, M. ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...